சுவிட்சர்லாந்தின் பிரதான சுற்றுலா தளங்களுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடும் மழை பெய்து வருவதனால் இவ்வாறு சில பகுதிகளுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் Zweilütschinen மற்றும் Grindelwald பகுதிகளுக்கான விமான சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.
ரயில் சேவைக்கு பதிலாக பஸ் சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇ
இன்றைய தினம் மாலை முதல் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காற்று மற்றும் கடும் மழை காரணமாக குறித்த ரயில் பாதை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரங்கள் முறிந்து வீழ்ந்தது உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.