சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திற்கு அதிக அளவு பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தின் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
எவ்வாறு எனினும் 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய பயணிகளின் எண்ணிக்கை இதுவரையில் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக சூரிச் விமான நிலையம் காணப்படுகின்றது.
இந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 3.11 மில்லியன் பயணிகள் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 6.5வீதமாக அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாத எண்ணிக்கையை விட 1.4 வீத குறைவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளில் இரண்டு தசம் இரண்டு 4 மில்லியன் மக்கள் உள்ளூர் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தில் வர்த்தக விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் 24,617 விமானங்கள் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டை விட 3.7 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.