ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 40 வேட்பாளர்கள் சார்பில் இவ்வாறு கட்டுப்பனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பனம் செலுத்தும் காலம் இன்றுடன் பூர்த்தியாகின்றது.
இந்த நிலையில் இம்முறை தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா உள்ளிட்ட பலர் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நாளைய தினம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்பய்பட உள்ளதாகவும், ஜனாதிபதி ரணில், அனுரகுமார, நாமல் உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.