தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தாவாஸின் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் அமைப்பினை மீறி செயல்பட்டதாக குற்றம் சுமத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முற்போக்கு கட்சி கலைக்கும் உத்தரவினை ஒரு வாரத்துக்கு முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
கடந்த தேர்தலில் இந்த கட்சி கூடுதல் வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கட்சியை கலைப்பதுடன் அந்த கட்சியின் தலைவர்கள் 10 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஸ்ரேத்தாவை, தாய்லாந்தின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரை நியமித்தமை தொடர்பில் அரசியல் சாசனத்திற்கு முரணாக பிரதமர் செயற்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றின் இந்த தீர்ப்பு காரணமாக தாய்லாந்தில் அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தாம் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை என பிரதமர் ஸ்ரேத்தா தெரிவித்துள்ளார்.