திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலய் லாமா சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வார இறுதியில் அவர் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
எனினும் இந்த விஜயத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தலய் லாமா சுவிஸ் விஜயம் செய்வார் என திபெத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
8000 திபெத்தியர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது