பலஸ்தீன இனவழிப்பை இஸ்ரேல் நியாயப்படுத்துகின்றது!

Must Read

இனவழிப்பு, பட்டினிச்சாவு, கூட்டுப் பாலியல் பலாத்காரம் போன்றவற்றை இஸ்ரேலிய அரசாங்கம் நியாயப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பலஸ்தீன பிரதிநிதி ரியாத் மன்சூர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது இடம்பெற்ற பெரும் இன அழிப்பு, யூத இன மக்கள் ஜெர்மனியில் அளிக்கப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் பலஸ்தீன மக்கள் அழிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பலஸ்தீன மக்களை இனவழிப்புச் செய்வதனை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் பரிந்துரைகளை இஸ்ரேல் கண்டு கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விவாதங்களை இஸ்ரேல் செவிமடுப்பது கூட இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத ஓர் நிலைப்பாட்டை இஸ்ரேல் கொண்டு உள்ளதாக மன்சூர் தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.