சுவிட்சர்லாந்தின் சென் கேலன் கான்டனின் பெசன்ஃபில்ட் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
டிரக் வண்டி ஒன்றும் மூன்று கார்களும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
டிரக்கில் மோதுண்ட கார் சில மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக சுரங்கப்பாதை சில மணித்தியாலங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
விபத்து தொடர்பில் செட் கேலன் கன்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.