எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியிருந்தனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இன்றைய தினம் முற்பகல் 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சி பணிகள் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரட்நாயக்க இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.