கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதிசொகுசு பஸ் சேவைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலைய கோட்டே பஸ் ஊழியர்கள் சங்கத்தினால் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதி சொகுசு பஸ் சேவையை எதிர்த்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் நடைபெறும் நிலையில் இவ்வாறு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என குறித்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பஸ் சேவையை தமது தொழிற்சங்கம் முன்னெடுத்து வந்ததாக தொழிற்சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்பொழுது புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயணி ஒருவரிடம் 3000 ரூபாய் அறவீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தமது தொழிற்சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட 42 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்தினால் பயணி ஒருவரிடம் 300 ரூபா கட்டணமாக அறவீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.