சுவிட்சர்லாந்தில் குரங்கம்மை பரவுகைக்கான சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கும்மை புதிய திரிபு பரவுகை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை பதிவாகி வருகின்றது.
ஆபிரிக்காவுக்கு வெளியே பாகிஸ்தான் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் குரங்கம்மை நோய் தொற்று பரவுகை சுவிட்சர்லாந்தை எவ்வாறு பாதிக்கும் என மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தற்போதைக்கு இந்த நோய் தொற்று நாட்டுக்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரையில் மொத்தமாக 20 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 551 குரங்கம்மை நோயாளர்கள் பதிவாகி இருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குரங்கம்மை நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 40000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்திருந்தது.
இதுவரையில் சுமார் 13000 தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு நாட்டில் குரங்கம்மை தீவிரமாக பரவக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது பொருத்தமானது எனவும் நீண்ட ஆடைகளை அணிவது உசிதமானது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.