சுவிட்சர்லாந்தின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதியில் குளிருடனான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோடை காலத்தில் விடுமுறை கொண்டாட்டங்களை திட்டமிட்டு உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்காது.
எனினும் வர இறுதி நாட்களில் வெப்பநிலை குறைவடைந்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியங்களும் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
திடீரென வெப்பநிலை வீழ்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெப்பநிலை 26 பாகை செல்சியஸாக காணப்படும் எனவும் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 21 பாகை செல்சியஸாக குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பான எதிர்ப்பு கூறல்களை வெளியிட்டுள்ளது.