சுவிஸ் பொருளாதாரத்தில் சிறு வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார விவகார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் சிறு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பூச்சியம் தசம் ஐந்து வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
பொருளாதார பொருளாதாரம் 0.4 வீதத்தினால் அதிகரிக்கும் என முன்னதாக எதிர்வு கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி 0.5 வீதமாக பதிவாகியுள்ளது.