ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுமார் 34 கட்சிகளும் கூட்டணிகளும் இன்றைய தினம் விசேட உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு உள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்திபட்டுள்ளது.
“இயலும் இலங்கை” என்ற பெயர் பெயரில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பத்தரமுள்ளவில் இன்றைய தினம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராக எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஜனாதிபதிக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.