ரஸ்யாவின் நகரமொன்றை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் செலென்ஸ்கீ இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
ரஸ்யாவின் சுடாஸா நகரை உக்ரைன் படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸ்ய பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளை ஊடறுத்து சுமார் 35 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக உக்ரைன் படையினர் தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் படையினர் சுமார் 1150 சதுர கிலோ மீற்றர் பரப்பினை கைப்பற்றியுள்ளதாக அறிவித்தள்ளது.
உக்ரைன் படையினர் ரஸ்யாவின் சுடாஸா நகரில் இராணுவ அலுவலகம் ஒன்றை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் படையினர் ஆரம்பித்துள்ள தரை வழித் தாக்குதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான ரஸ்ய பிரஜைகள் இடம்பெயர நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உக்ரைன் படையினரால் கைப்பற்றிய கிரமம் ஒன்றை மீளக் கைப்பற்றியதாக ரஸ்யா அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக உக்ரைன் படையினர் ரஸ்யாவிற்குள் ஊடுறுவி முன்நகர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.