சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 59 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.