சுவிட்சர்லாந்து விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் சில்லுகள் புற்தரையில் சிக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த சுவிஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவ அவசர நிலைமை காரணமாக கஸகஸ்தானில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
அஸ்தானா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது ஓடு பாதையொன்று மூடப்பட்டதன் காரணமாக விமானத்தை 180 பாகையில் திருப்ப நேரிட்டுள்ளது.
இதன் போது ஓடு பாதையை விட்டு திரும்பும் போது விமானத்தின் சில்லுகள் புற்தரையில் புதையுண்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த 50 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட பயணியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சில்லுகள் புற்தரையில் சிக்கியதனால் விமான நிலையம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.