இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பிலான பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு விநியோகம் செய்யப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முன்பதிவு செய்யாது வருகை தரும் 30 விண்ணப்பதாரிகளுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈ கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ள காரணத்தினால் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு புத்தகம் கொள்வனவு செய்யப்படவில்லை.
இதனால் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதில் பெரும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
ஜுலை மாதம் கிடைக்கப் பெற வேண்டிய ஈகடவுச்சீட்டுக்கள் ஒக்ரோபர் மாதமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாளொன்றுக்கு 1300 கடவுச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டாலும் தற்பொழுது 250 முதல் 300 கடவுச்சீட்டுக்களே விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய தேவையின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென குடிவரவு கடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.