காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி முதல் இதுவரையில் காசாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 40099 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 92609 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், காசா போரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வ புள்ளி விபரங்களை விடவும் வெகுவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதகாத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்களின் காரணமாக குறித்த இடங்களுக்கு மீட்புப் பணியாளர்களினால் செல்ல முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பலவந்தமான அடிப்படையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய படையினர் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.