சுவிட்சர்லாந்து மருத்துவமனைகளில் காயங்களை குணப்படுத்துவதற்கு மீன் தோல் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் தோல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சுமார் 70 தோல் மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய மருத்துவமனைகளிலும் காயங்களை குணப்படுத்துவதற்கு மீன் தோல் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
தலையில் காயம் ஏற்பட்டு மண்டையோடு தெரிந்த நோயாளி ஒருவருக்கு மீன் தோலைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.