சுவிட்சர்லாந்து பயணி ஒருவர் நாடு திரும்புவதற்காக சுமார் பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை செலவிட்டுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கிப் பயணம் செய்த விமானமொன்று, மருத்துவ அவசர நிலைமையினால் கஸகஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
கஸகஸ்தானின் அஸ்தானா விமான நிலையத்தில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலைமையினால் இவ்வாறு விமானம் அவசராமக தரையிறக்கப்பட்டது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையிலிருந்து விலகில் புற்தரையில் விமானத்தின் சில்லு சிக்கியிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய பெண் ஒருவர் பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை செலுத்தி நாடு திரும்பியுள்ளார்.
பயணிகள் வியன்னா நோக்கி பயணித்து பின்னர் அங்கிருந்து சூரிச் நோக்கிப் பயணித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்கு அவசரமாக திரும்ப வேண்டியிருந்த காரணத்தினால் குறித்த பெண் பத்தாயிரம் சுபிஸ் பிராங்குகளை செலுத்தி நாடு திரும்ப நேரிட்டுள்ளது.