இஸ்ரேலிய அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் கடந்த மாதம் யேமனின் ஹோடியாத் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது,
மின்சார உற்பத்தி நிலையமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தபட்சம் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஹிஸ்புல்லாஹ் போராளிகள் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களையும் போர்க் குற்றச் செயலாகவே கருதுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிவிலியன்கள் மீதான அனைத்து வகையிலான தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டியவை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.