சுவிட்சர்லாந்தில் புதிதாக அணு மின் நிலையங்கள் உருவாக்கப்படுவதனை எதிர்ப்பதாக பசுமைக் கட்சி அறிவித்துள்ளது.
அணு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எதிர்காலம் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சியின் தலைவர் Lisa Mazzone இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் அணு உற்பத்தி நிலையம் தொடர்பில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அணு மின் உற்பத்தி நிலையங்களுக்கான தடை நீக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மீண்டும் அனு மின் நிலையங்கள் உருவாக்கப்படுவதனை எதிர்ப்பதாக பசுமைக் கட்சி அறிவித்துள்ளது.