சுவிட்சர்லாந்தின் பொருளாதார, கல்வி மற்றும் ஆய்வுத்துறை அமைச்சர் கய் பெர்மிலான் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
அலுவலகத்தில் வைத்து அவர் கீழே வீழ்ந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்த காரணத்தினால் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
காயமடைந்த அமைச்சர் நோயாளர் காவு வண்டி ஊடாக அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெர்மிலான் சில நாட்கள் தங்கியிருந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பீட் ஜேன்ஸ், அமைச்சர் பெர்மிலானின் பணிகளை முன்னெடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.