சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் ஒரே நாளில் 111000 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜுலை மாதம் 26ம் திகதி விமான நிலையத்தை அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
எவ்வாறெனினும், கடந்த 2019ம் ஆண்டில் கோடை காலத்தில் ஒரே நாளில் 115000 பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தியமையே சாதனை எண்ணிக்கையாக காணப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு அதிகளவு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கோடை காலத்தில் அதிகளவான பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் விமான நிலையத்தில், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாக சில பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.