உலகின் வயது முதிர்ந்தவர் காலமானதாக சீ.என்.என். செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த மாரியா பிரனயாஸ் மொரேரா என்பவரே இவ்வாறு காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
117 ஆண்டுகள் மற்றும் 168 நாட்கள் இவர் உயிர் வாழ்ந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்த மரணம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்பெய்னின் கட்டலோனியாவில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையமொன்றில் மாரியா அமைதியாக காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாரியா உலகின் வயது முதிர்ந்த நபர் என கின்னஸ் உலக சாதனை அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாரியா உலகின் வயது முதிர்ந்த நபர் என கின்னஸ் உலக சாதனை அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸைச் சேர்ந்த அன்ட்ரே என்ற அருட்சகோதரி 118 வயது வரை வாழ்ந்திருந்தமை அதுவரையில் சாதனையாக கருதப்பட்டது, அவரது மறைவின் பின்னர் மாரியா உலகில் உயிர் வாழும் வயது முதிர்ந்தவர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டார்.
அதிர்ஸ்டம் மற்றும் மரபணு காரணமாக நீண்ட காலம் உயிர் வாழக் கிடைப்பதாக மாரியா தெரிவித்திருந்தார்.
உலகில் அதிக காலம் உயிர் வாழந்தவர் என்ற சாதனையை ஜேன் லுயிஸ் கால்மன்ட் என்ற பெண்ணைச்சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் 122 ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்தார்.