சுவிட்சர்லாந்தில் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பை கோரியுள்ளன.
வாழ்க்கையைச் சொலவு அதிகரிப்பினை ஈடு செய்யக்கூடிய வகையில் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க ஒன்றியங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த ஆண்டில் சம்பளங்கள் நான்கு வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு மற்றும் கொள்வனவு இயலுமை பலவீனம் காரணமாக மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட சாதக நிலைமைகளைத் தாண்டி தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக மெய்ச் சம்பளப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.