சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சுப் பிரஜை நீரில் மூழ்கி கொல்லப்பட்டுள்ளனர்.
வொட் கான்டனின் நயோன் கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்தவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
58 வயதான பிரெஞ்சுப் பிரஜை இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல் போனவரை உலங்கு வானூர்தி ஊடாகவும் படகுகள் மூலமாகவும் மீட்புப் பணியாளர்கள் தேடியுள்ளனர்.
குறித்த நபரை மீட்புப் பணியாளர்கள் மீட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.