சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஜெனீவாவில் குடியிருப்பு தொகுதிக்கு அருகாமையில் காணப்பட்ட குப்பைத் தொட்டியொன்றில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குப்பைத் தொட்டிக்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த பையொன்றை நபர் ஒருவர் எடுத்த போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சிறு குண்டாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேறும் வெடிபொருட்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
சூரிச் தடயவியல் விஞ்ஞான நிறுவகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தியுள்ளனர்.