உலகில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் ஓவியம் ஒன்று சிட்ஸலாந்தில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல ஓவியர் லியனாடோ டாவின்சியின் சல்வெட்டர் முன்டி என்ற இந்த ஓவியம் பற்றி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இது குறித்த ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், இந்த ஓவியம் ஜெனிவாவில் அமைந்துள்ள பெயர் குறிப்பிடப்படாத ஓர் இடத்தில் ரகசியமாக பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஓவியம் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஓவியத்தின் பெறுமதி சுமார் 384 மில்லியன் சுவிஸ் பிராங்குள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஓவியத்தை சவுதி முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
பிபிசி சர்வதேச ஊடகம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஓவியம் 2019 ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் வைக்க திட்டமிடப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் இந்த லியனாடோ டாவின்சியின் சல்வாட்டர் முன்டி என்ற ஓவியம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசில் அமைந்துள்ள லொவ்ரே அருங்காட்சியகத்தை போன்று ஒன்றை சவுதி அரேபியாவின் ரியாத்தில் உருவாக்குவதற்கு முடிக்குரிய இளவரசர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாவின்சியின் பிரபல்யமான மோனாலிசா ஓவியத்தை பார்ப்பதற்காக லொவ்ரேவ் அருங்காட்சியகத்திற்கு பெரும் எண்ணிக்கிலான மக்கள் படையெடுக்கின்றனர்.
அதேவிதமாக ரியாதிலும் டாவின்சியின் ஓவியத்தை காட்சிப்படுத்தி மக்களை கவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஓவியம் கடந்த 2005ம் ஆண்டில் அமெரிக்காவில் வைத்து 1175 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.