சுவிட்சர்லாந்தில் கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து முழுவதும் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் ரயில் சேவை நிறுவனமான எஸ்.பி.பி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ரயில் சேவையின் இணைய வழி சேவையும் ரயில் நிலையங்களில் காட்சி பலகைகளும் இந்த தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மென்பொருள் ஒன்றினால் இந்த சிக்கல் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
எஸ்பிபியின் இணைய வழி சேவை சுமார் அரை மணித்தியாலங்களுக்கு தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய வழியாகவும் செயலி வழியாகவும் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நுழைவு சீட்டுகளை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நாடு முழுவதிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில ரயில் சேவைகளின் பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டது.