சுவிசில் வர்த்தகர்கள் அதிக அளவு விமான பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்தல் 10 வீதம் அதிகரித்துள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
AirPlus என்ற கொடுப்பனவு திட்ட பெரு நிறுவனம் இந்த கணக்கெடுப்பினை முன்னெடுத்திருந்தது.
வர்த்தக ரீதியாகவும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படும் விமான பயணங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இவ்வாறு சுவிட்சர்லாந்தின் விமான பயணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.