சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனில் பாரிய தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேர்னின் இன்டர்லாகேன் பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாரிய பொலிஸ் சோதனை நடத்தப்பட்டதாக கான்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தேடுதல் வேட்டை தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இன்டர்லேகனின் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகாமையில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் வாகனங்கள் நோயாளர் காவு வண்டிகள் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.