சுவிட்சர்லாந்தின் சென் கேலன் கான்டனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நூற்றுக்கணக்கான கோவிட் 19 போலிச் சான்றிதழ்களை வழங்கியதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றிலிருந்து குணமானதாக போலிச் சான்றிதழ்களை இந்த மருத்துவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய உறுதிப்படுத்தல்கள் இன்றி இந்த ஆவணங்களை மருத்துவர் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் சென் கேலன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த மருத்துவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.
78 வயதான சென் கேலன் கான்டனைச் சேர்ந்த குறித்த மருத்துவருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் 51 தடுப்பூசி சான்றிதழ்களையும் 409 நோய்த் தொற்று குணமான சான்றிதழ்களையும் போலியாக வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் மாதம் வரையில் இவ்வாறு போலி ஆவணங்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் உணவகங்கள் மற்றும் நடன அரங்கங்கள் போன்றவற்றிற்கு பிரவேசிக்கவும் இந்த சான்றிதழ்களை சிலர் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.