சுவிட்சர்லாந்தில் போலி ஆவணங்களை வழங்கிய மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
சென் கேலன் கான்டனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
குறித்த மருத்துவர் கோவிட் 19 பெருந்தொற்று குறித்து போலிச் சான்றிதழ்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் தொற்றிலிருந்து மீண்டதாக 450 மருத்துவ சான்றிதழ்களை வழங்கியதாகவும் கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தி மேலும் பல மருத்துவ சான்றிதழ்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
78 வயதான மருத்துவர் ஒருவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் அற்ற ஒருவரே இவ்வாறு சான்றிதழ்களை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மருத்துவருக்கு எதிராக 12 மாத சிறை தண்டனையும் 3000 சுவிஸ் பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பற்றி தெரியாத காரணத்தினால் தமது கட்சிக்காரர் சான்றிதழ்களை வழங்கியதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.