35 நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உலகின் முக்கியமான 35 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இவ்வாறு வீசா வசதி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த இலவச வீசா வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
ஆறு மாத காலத்திற்கு இந்த இலவச வீசா நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, கனடா, இந்தியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளுக்கு இவ்வாறு இலவச வீசா அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய இராச்சியம்
- ஜெர்மனி
- நெதர்லாந்து
- பெல்ஜியம்
- ஸ்பெய்ன்
- அவுஸ்திரேலியா
- டென்மார்க்
- போலந்து
- கஸகஸ்தான்
- சவூதி அரேபியா
- ஐக்கிய அரபு இராச்சியம்
- நேபாளம்
- சீனா
- இந்தியா
- இந்தோனேசியா
- மலேசியா
- ரஸ்யா
- தாய்லாந்து
- ஜப்பான்
- பிரான்ஸ்
- ஐக்கிய அமெரிக்கா
- கனடா
- செக் குடியரசு
- இத்தாலி
- சுவிட்சர்லாந்து
- ஒஸ்ட்ரியா
- இஸ்ரேல்
- பெலாரஸ்
- ஈரான்
- சுவீடன்
- தென்கொரியா
- கட்டார்
- ஓமான்
- பஹ்ரேன்
- நியூசிலாந்து