சுவிட்சர்லாந்திலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவ் மற்றும் லெபனானின் பெய்ரூட் நகரங்களுக்கான விமான பயண இடைநிறுத்தம் மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவை நிறுவனம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான விமான பயண இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செப்டம்பர் மாத இறுதி வரையில் பீரோ லெபனானின் பெய்ரூட்டுக்கான பயணங்களை சுவிஸ் விமான சேவை மேற்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலமை குறித்து மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் வான் பரப்பை சுவிஸ் விமானங்கள் பயன்படுத்தும் அதேவேளை, ஈராக் மற்றும் இஸ்ரேலிய வான் பரப்புகளை பயன்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.