சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறைவாக காணப்படுவதால் உருளைக்கிழங்குக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால், அரசாங்கம் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதற்கான உச்சவரம்பினை 15,000 தொன்களினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
காலநிலை காரணிகளினால் உருளைக்கிழங்கு விளைச்சல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இம்முறை உருளைக்கிழங்கு எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலை தராது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
விளைச்சல் குறையும் என்ற எதிர்வுகூறல் காரணமாக உருளைக்கிழங்கு வகைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு இறக்குமதிக்கான உச்சவரம்பு அதிகரிப்பு இந்த ஆண்டு இறுதி வரையில் அமலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உருளைக் கிழங்கினை கேள்விக்கு ஏற்ற வகையில் நிரம்பல் செய்யப்பட முடியாத நிலைமை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.