இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை காலம் தாழ்த்தியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட இருந்தது, எனினும் போதிய அளவு நிதி இல்லாத காரணத்தினால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
பிரதம நீதி அரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதி அரசர்கள் குழுவினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்கப் பட்டமை குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின் போது நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தவறிழைத்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஆட்சி மன்றத் தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்ய தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எனினும் தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்திற்காக வருந்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கும் இந்த காலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், குறித்த தீர்மானம் தொடர்பில் தாம் வருத்தமடையவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கியிருந்தால், பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்திருக்க முடியாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.