தாய்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு தாய்லாந்து விமானிகளும், ஐந்து சீன மற்றும் இரண்டு தாய்லாந்து பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
Cessna Caravan C208B ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாங்கொக்கின் பிரதான விமான நிலையத்திலிருந்து ட்ராட் மாகாணத்திற்கு பயணம் செய்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானம் பத்து நிமிடங்கள் தொடர்பின்றி இருந்ததாக விமான கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
விமானம் வானிலிருந்து வீழ்ந்து பாரிய சத்தத்துடன் வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா விடுதியொறுக்குப் பயணம் செய்தவர்களே இவ்வாறு விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சுமார் 70 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலங்களை அடையாளம் காண்பதற்காக அவற்றை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
நதியொன்றுக்கு அருகாமையில் காணப்படும் காட்டுப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.