சுவிசில் வான்குடை மிதவை (paragliding) விபத்தில் இருவர் விபத்தில் சிக்கி பலி
சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனின் பிரித்ரோன் மலைப்பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வான்குடை மிதவை சிலநூறு மீட்டர்கள் உயரே சென்ற பின்னர் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மலையிலிருந்து பிரித்ரோன் மலையிலிருந்து பரந்தபோது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வான் குடை மிதவை விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்த இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்குடை மிதவை விமானங்களாக கருதப்படுவதனால் விமான சட்டங்களின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.