திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு சுவிட்சர்லாந்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
தலாய் லாமா நேற்றைய தினம் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளார்.
தலாய் லாமாவின் விஜயத்தை அறிந்து கொண்ட பலர் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தலாய் லாமாவிற்கு வணக்கம் தெரிவித்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் தலாய் லாமா சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளைய தினம் தலாய் லாமா பங்கேற்கும் விசேட நிகழ்வு ஒன்று சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் திபெத் புலம்பெயர் சமூகத்தினர் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.