சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றை கொள்ளையிட்ட நபரை பொலிஸ் நாய் மடக்கிப் பிடித்துள்ளது.
ரியோ என்ற பொலிஸ் மோப்ப நாயே இவ்வாறு கொள்ளையிட்ட நபரை பிடித்துள்ளது.
சென் கேலன் கான்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கேலனில் நூலன்ஸ்ட்ராஸி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டை உடைத்து களவாடி தப்பிச் சென்ற போர்த்துல் நாட்டைச் சேர்ந்த நபரை பொலிஸ் நாய் பிடித்துக் கொடுத்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று சொற்ப நேரத்தில் நாய் சந்தேக நபரை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.