ஜெர்மனியில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெர்மனியின் சொலின்ஜென் நகரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்வகைமையை கொண்டாடும் வகையில் நகரில் இடம்பெற்ற மூன்று நாள் நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
தீவிரவாத தாக்குதலா என்ற கேள்விக்கு தற்போதைக்கு பதிலளிக்க முடியாது எனவும், எனினும் திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.