ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுமார் 20 வேட்பாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அவசியமில்லை என அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கோரியுள்ள ஏனைய வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இம்முறை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அண்மையில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.