இலங்கையில் புதிய விமான சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Air Ceilao என்ற புதிய விமான சேவை இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்திய வலய நாடுகளுக்கு இந்த விமான சேவை நிறுவனம் தனது சேவையை வழங்க உள்ளது.
இலங்கையின் விமான சேவை வரலாற்றில் புதிய ஓர் அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விமான சேவை நிறுவனம் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக விமான சேவையை நிறுவனத்தின் தலைவர் ஜனித் காஸான் தெரிவித்துள்ளார்.
தரமான சேவையை வழங்குவதுடன் மிகவும் குறைந்த அளவு கட்டணங்கள் அறவீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த விமான சேவை நிறுவனம் சேவையை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக ஆவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான நீண்ட தூர விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அளவில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க காத்திருப்பதாகவும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஜானித் தெரிவிக்கின்றார்.