இஸ்லாமிய படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம் பெற்று வருகின்றது.
ஹிஸ்புல்லாஹ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது,
ஹிஸ்புல்லாஹ் போராளிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கிடைக்கப்பெற்ற உளவு தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய படையினர் மீது ஹிஸ்புல்லா போராளிகளும் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையிலான இந்த மோதல்கள் மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹிஸ்புல்லாஹ் போராளிகள் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்கள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் ஈரானில் ஹிஸ்புல்லா முக்கியஸ்தர் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல்களை ஹிஸ்புல்லாஹ் போராளிகள் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் போராளிகள் நடத்திய தாக்குதலை முறியடித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான மோதல் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் போர் விமானங்கள் லெபனானில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதல்களை முறியடித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் அமைச்சரவை விசேட கூட்டமொன்றை கூட்டி பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.