இலங்கையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாகவும் இவை விசேட பாதுகாப்பு வழிமுறைகளை கொண்டவை எனவும் அறிவித்துள்ளது.
கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போர் அவசரப்படாது அடுத்த மாதம் வரையில் காத்திருக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய கோரியுள்ளார்.
கடவுச்சீட்டு புத்தகங்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக தற்பொழுது நாளொன்றுக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் மட்டும் வழங்கப்படுகின்றது.
பழைய கடவுச்சீட்டுக்கள் கிரமமான முறையில் புழக்கத்திலிருந்து அகற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.