ஜெர்மன் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Must Read

ஜெர்மனியில் அண்மையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனின் சோளிங்ன் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.

இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிரிய நாட்டைச் சேர்ந்த 26 வயதான ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உரிமை கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீவிர தேடுதல் வேட்டையின் பின்னர் சந்தேக நபரை கைது செய்ததாக ஜெர்மனிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.