அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அந்நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்திற்காக இதுவரையில் 540 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாத காலப் பகுதியில் இவ்வாறு பாரியளவு நிதி திரட்டப்பட்டுள்ளது.
கமலா ஹரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநயாகக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார்.
ஹரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெருந்தொகை நன்கொடைகள் கிடைக்கப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 540 மில்லியன் டொலர் திரட்டப்பட்டுள்ளதாக ஹரிஸின் பிரசார செயலாளர் ஜென் ஓமெலி டில்லோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு மாத காலப் பகுதிக்குள் அதி கூடிய பிரசார நிதி திரட்டப்பட்ட சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் கருதப்படுவதாக சுட்டிக்காட்பட்பட்டுள்ளது.