ரஷ்ய படையிர் உக்ரேனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது பாரிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்கிரனின் சக்தி வள உட்கட்டுமான வசதிகளை தாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல நகரங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் உக்கரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அனைத்து பகுதிகளின் மீதும் ரஷ்யா இவ்வாறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்துவதாக உக்ரேன் வான்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய தீவிரவாதிகள் உக்ரைன் மின்சார உட்கட்டுமானத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் பிரதமர் டென்னிஸ் சியாம்ஹல் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமார் 15 பிராந்தியங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
இந்த தாக்குதல்கள் காரணமாக தேசிய மின் உற்பத்தி நிறுவனம் கட்டாய மின் தடையை அமல்படுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் படையினர் ரஷ்யாவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்த பின்னணியில் ரஷ்யா இவ்வாறு உக்ரேனின் மின் உற்பத்தி கட்டமைப்பை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உக்கிரேன் படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.